/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
/
திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 17, 2025 07:57 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது.
பட்டமளிப்பு விழாவிற்கு கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்ரமணியன், துணை தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனி ராஜ் பங்கேற்றனர்.
அறக்கட்டளை உறுப்பினர்கள் சத்யநாராயணன், சாந்தி, குபேரன் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு துறை கட்டுப்பாட்டு அலுவலர் குமார் மாணவ, மாணவிகள் 462 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் உள்ளிட்ட கல்லூரி பணியாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.