/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.இ.டி., வித்யாமந்திர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
வி.இ.டி., வித்யாமந்திர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
வி.இ.டி., வித்யாமந்திர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
வி.இ.டி., வித்யாமந்திர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 18, 2024 06:00 AM

திருக்கோவிலுார் : காணை வி.இ.டி., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி செயலாளர் சந்தான லட்சுமி முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் கார்த்திய ராஜ் வரவேற்றார். பள்ளி துணைத் தலைவர் துர்கா தேவி, துணைச் செயலாளர் ராஜலட்சுமி வாழ்த்திப் பேசினார்.
விழாவிற்கு, பள்ளி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் ஆஷாலிடியா ஆண்டறிக்கை வாசித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
பள்ளி துணை முதல்வர் இளையபெருமாள் நன்றி கூறினார்.