/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.எஸ்.வி., பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு
/
எஸ்.எஸ்.வி., பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு
ADDED : ஏப் 01, 2025 04:50 AM

உளுந்துார்பேட்டை: சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப் பள்ளி மழலையர் பிரிவில் 18வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது
விழாவிற்கு, பள்ளி முதல்வர் ஹெலன் பாத்திமாராணி தலைமை தாங்கினார். தாளாளர் விஜயா வரவேற்றார். அறக்கட்டளைத் தலைவர் இந்திரா, பொருளாளர் சாந்தி, தாளாளர் விஜயா, இணைச் செயலாளர் தமிழரசி, அறக்கட்டளை உறுப்பினர்கள் அருண்மோகன், சாந்தி, அன்புமணி, மஞ்சுளா, தட்சணாமூர்த்தி, தமிழ்ச்செல்வி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினர்.
மேல்நிலைப் பள்ளி முதல்வர் திருவேங்கடம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அறக்கட்டளை உறுப்பினர் அருண்மோகன் பள்ளியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பள்ளி போக்குவரத்து பிரிவு மேலாளர் மனோகரன் நன்றி கூறினார்.