/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் உலர்த்துவதால் விபத்து அபாயம்
/
தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் உலர்த்துவதால் விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் உலர்த்துவதால் விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் உலர்த்துவதால் விபத்து அபாயம்
ADDED : மே 05, 2025 05:52 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பகுதியில் போதிய உலர் களங்கள் இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் தானியங்களை தேசியநெடுஞ்சாலையில் உலர்த்துவதால் விபத்து அபாயம் உள்ளது.
கள்ளக்குறிச்சியிலிருந்து நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பஸ், லாரி, வேன், கார், சரக்கு வாகனங்கள் சேலம், கோயம்புத்துார், ஊட்டி, கேரளா மற்றும் விழுப்புரம், மேல்மருவத்துார், சென்னை, உள்ளிட்ட பல்வேறுபகுதிகளுக்கு செல்கின்றன.
இவ்வழியே அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளான தச்சூர், புக்கிரவாரி, எரவார், தியாகை உள்ளிட்ட பகுதிகளில் போதிய உலர்களங்கள் இல்லை. இதனால் விவசாயிகள், அறுவடை செய்யும் எள் செடிகளை கள்ளக்குறிச்சி - சேலம், கள்ளக்குறிச்சி - உளுந்துார்பேட்டைஆகிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையூறாக கொட்டி உலர்த்தும் நிலைஏற்பட்டுள்ளது.
இதனால், இவ்வழியே அதிவேகமாக செல்லும் வாகனங்கள், தானியங்களில் சிக்கி,விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோல், விளைவித்த பயிர்களின் செடிகளை சாலையோரமே கொட்டி எரிப்பதால், நெடுஞ்சாலையில் புகைமண்டலம் சூழ்ந்து விபத்து அபாயம் ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் தானியங்கள் கொட்டிஉலர்த்துவதையும், கழிவுகளை கொட்டி எரிப்பதையும் தடுக்க, விவசாயிகளுக்கு போதிய உலர்களம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.