/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்
/
மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்
ADDED : நவ 23, 2024 06:46 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் இன்று (23ம் தேதி) நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில், நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால், கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் இன்று 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.