ADDED : ஆக 20, 2025 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் மூப்பனார் பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு த.மா.கா., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் அதையூர் பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் செல்வராஜ், சார்லஸ்ஜான்போஸ்கோ, காமராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி, காந்தி மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சுகுணாசங்கர், மாவட்ட விவசாய அணி தலைவர் முருகவேல் உட்பட பலர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.