ADDED : பிப் 24, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.
இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலவருக்கு அபிஷேக, ஆராதனையும், பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு அம்மன் காளி அலங்காரத்தில் கோவில் அருகே உள்ள மணிமுக்தா ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு படையலிட்ட சுண்டல் சூறையிட்டனர். இன்று மாலை 4:00 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடக்கிறது.

