ADDED : மார் 27, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கிராவல் மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராம குன்று மேட்டில் அனுமதியின்றி இரவில் கிரவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர்.
அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி டிரைவர் ச.செல்லம்பட்டை சேர்ந்த ராசேந்திரன் மகன் ரமேஷ், 35; கைது செய்யப்பட்டார். டிப்பர் லாரி, ஜே.சி.பி., மற்றும் 3 யூனிட் கிராவல் மண் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய, ஜே.சி.பி., உரிமையாளர் சின்னசாமி மகன் வெங்கடேசன், 49; மற்றும் டிரைவர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.