/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராவல் மண் திருட்டு: 5 பேர் கைது
/
கிராவல் மண் திருட்டு: 5 பேர் கைது
ADDED : செப் 22, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் கிராவல் மண் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் கடந்த 19ம் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புத்தந்துார் ஏரியில் அனுமதியின்றி டிப்பரில் கிராவல் மண் ஏற்றும் பணியில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், 37; அழகாபுரம் லியோ பிரான்கிளின், 24; புத்தந்துார் சூர்யா, 23; சரவணன், 26; பாலாஜி, 23; ஆகிய 5 பேரையும் கைது செய்து, அங்கிருந்த பதிவெண் இல்லாத ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரம் மற்றும் 3 டிராக் டர் டிப்பர்களை பறிமுதல் செய்தனர்.