/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராவல் திருட்டு லாரி பறிமுதல்
/
கிராவல் திருட்டு லாரி பறிமுதல்
ADDED : மார் 27, 2025 04:37 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் உலகங்காத்தான் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி நிற்காமல் சென்றதால், அதை துரத்தி சென்று தச்சூர் அருகே லாரியை மடக்கி நிறுத்தியபோது , டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரியில், ஒரு யூனிட் கிராவல் மண் இருந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் பொற்படாக்குறிச்சியை சேர்ந்த கருப்பன் மகன் செல்வன், டிரைவர், உலகங்காத்தானை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஸ்ரீதர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.