/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவரணி செயலாளர் மா.செ.,யிடம் வாழ்த்து
/
மாணவரணி செயலாளர் மா.செ.,யிடம் வாழ்த்து
ADDED : நவ 18, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, : அ.தி.மு.க.,வில் நியமிக்கப்பட்ட கட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வாழ்த்து பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க.. மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாக்கியராஜ் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட தலைவர் பார்த்திபன், இணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தவமணி. மகேஷ், தனசேகர், சுரேஷ் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.