/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு 3ம் தேதி குறைகேட்பு முகாம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு 3ம் தேதி குறைகேட்பு முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு 3ம் தேதி குறைகேட்பு முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கு 3ம் தேதி குறைகேட்பு முகாம்
ADDED : ஜூலை 01, 2025 01:42 AM
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் வருவாய் கோட்டம் அளவில் நடக்கிறது. திருக்கோவிலுார் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி., அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, படுத்த படுக்கையானவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு உதவித் தொகை, உதவி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், வீல்சேர்.
செயற்கை கை, கால், காலிபர், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம், ஊன்றுகோல், சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் உதவி, ஆவின் முகவர், கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.