/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டம் 507 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டம் 507 மனுக்கள் குவிந்தன
ADDED : டிச 23, 2025 07:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
அதில், வருவாய் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 507 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்

