/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம்: 527 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்: 527 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜன 30, 2024 06:01 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 527 புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., சத்தியநராயணன் தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, வேளாண்மை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை தொடர்பாக 527 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு நிராகரிப்பு காரணம் குறித்து மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தலா 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆவாஸ் மென்பொருள் அடங்கிய கைக்கணினி மூலம் பொருள் சொல்லும் உபகரணத்தை மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளிகளுக்கு டி.ஆர்.ஓ., வழங்கினார்.
கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.