/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 19, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், 36 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏடி.எஸ்.பி., சரவணன், திருமால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.