ADDED : ஆக 31, 2026 07:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 686 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்திற்கு, கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா கோருதல், நிலம் அளவீடு, சாலை அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, தெரு மின்விளக்கு அகற்றுதல், மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கோருதல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர்.
இதில், பொதுமக்களிடமிருந்து 596 மனு, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 90 மனு என மொத்தமாக 686 கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 43 கிறிஸ்துவ சமுதாய ஏழை, எளிய பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது, டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
