/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்
/
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 04:41 AM

திருக்கோவிலுார்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறை தீர்வு கூட்டம் திருக்கோவிலுார் தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலனுக்காக, சென்னை ராணுவ கணக்கு கட்டுப்பாட்டு குழு சார்பில், திருக்கோவிலுார் தாலுக்கா அலுவலகத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குறை தீர்வு கூட்டம் நடந்தது. ராணுவ கணக்கு கட்டுப்பாடு குழு அதிகாரிகள் திலீப் குமார், உமா மகேஸ்வர ரெட்டி தலைமை தாங்கினர். முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஆயிஷா பேகம் முன்னிலை வகித்தார்.
இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு, தங்களின் ஓய்வூதிய குறைகளை எடுத்துக் கூறினர். உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் முன்னாள் முப்படை நல சங்க முஜீர்கான், கல்யாண்குமார், ராமச்சந்திரன், சேகர், பத்மநாபன், கங்காதரன் உள்ளிட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.