/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேம்பாலம் அருகே வழிகாட்டி பெயர் பலகை அமைப்பு
/
மேம்பாலம் அருகே வழிகாட்டி பெயர் பலகை அமைப்பு
ADDED : ஏப் 02, 2025 06:23 AM

தியாகதுருகம் : தினமலர் செய்தி எதிரொலியாக எலவனாசூர்கோட்டை மேம்பாலம் அருகே வாகன ஓட்டிகளின் குழப்பத்தை தீர்க்க வழிகாட்டி பெயர் பலகையை அதிகாரிகள் அமைத்தனர்.
எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் விபத்தை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்து கடந்த வாரம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. ஆனால் எலவனாசூர்கோட்டை ஊருக்குள் செல்ல சர்வீஸ் சாலையில் இறங்கி மேம்பாலத்தின் கீழ் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. எலவனாசூர்கோட்டை வழியே சென்றால் தான் திருக்கோவிலுார், திருவண்ணாமலை, வேலுார் ஆகிய ஊர்களுக்கு செல்ல முடியும்.
மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்து வழிகாட்டி பெயர் பலகை அமைப்பதற்கு முன்னதாகவே பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டதால் புதிதாக இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.
பல வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்லாமல் மேம்பாலத்தின் மீது ஏறி கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் நீண்ட தொலைவு சென்று மீண்டும் திரும்பி எலவனாசூர்கோட்டை வர வேண்டிய நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக எலவனாசூர்கோட்டை செல்வதற்கு சர்வீஸ் சாலையில் செல்வதற்கான இடதுபுறம் திரும்புவதற்கான அம்புக்குறியிட்ட வழிகாட்டிப் பலகையை நகாய் அதிகாரிகள் உடனடியாக பொருத்தி வாகன ஓட்டிகளின் குழப்பத்தை தீர்த்துள்ளனர்.
இதனால் இவ்வழித்தடத்தில் செல்பவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் கிடைத்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

