/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெற்றிக்கான வழிகாட்டி 'தினமலர் பட்டம்' இதழ்; ஏ.கே.டி., பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன்
/
வெற்றிக்கான வழிகாட்டி 'தினமலர் பட்டம்' இதழ்; ஏ.கே.டி., பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன்
வெற்றிக்கான வழிகாட்டி 'தினமலர் பட்டம்' இதழ்; ஏ.கே.டி., பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன்
வெற்றிக்கான வழிகாட்டி 'தினமலர் பட்டம்' இதழ்; ஏ.கே.டி., பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன்
ADDED : நவ 12, 2024 10:28 PM

கள்ளக்குறிச்சி ; பள்ளி மாணவர்களின் வெற்றிக்கான வழிக்காட்டியாக தினமலர் பட்டம் இதழ் திகழ்கிறது என்று ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
'தினமலர் பட்டம் இதழ்' வினாடி வினா போட்டி நிகழ்ச்சி குறித்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது;
தினமலர் பட்டம் நாளிதழ், மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு அத்தியாவசியமானது.
இது வெறும் ஒரு நாளிதழ் மட்டுமல்ல, மாணவர்களின் அறிவை வளர்க்கும் ஒரு ஆலமரம். குறிப்பாக, போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும்மாணவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்தே நீட், ஜேஇஇ, என்டிஏ, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளியில் பயின்ற 637 மாணவர்கள் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஐடி சேர்க்கையில் எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்டதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கு உறுதுணையாக தினமலர் பட்டம் இதழ் இருக்கிறது.
எங்கள் பள்ளியில் கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி அளிக்க, தினமலர் பட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அதன் எளிய நடையும், சுவாரஸ்யமான தகவல்களும் மாணவர்களை வாசிப்பில் ஈடுபட வைக்கின்றன.
தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி மாணவர்களுக்கு பொது அறிவை வளர்த்து கொள்வதற்கான உத்வேகத்துடன், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் எங்கள் மாணவர்களை சாதிக்க வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.