தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு ‘குண்டாஸ்’

கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு ‘குண்டாஸ்’

கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு ‘குண்டாஸ்’


UPDATED : நவ 27, 2026 09:26 PM

ADDED : நவ 27, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 09:26 PM ADDED : நவ 27, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் கடந்த மாதம் 27ம் தேதி புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் கொலை வழக்கில் அவரது தம்பி ஆனந்தன் அவர்கள் நண்பர்கள் பன்னீர்செல்வம், சண்முகம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ஷஹ்னாஸ் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து கலெக்டர் பத்மஜா, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தன், 40; பன்னீர்செல்வம், 46; சண்முகம், 40; ஆகிய மூன்று பேரம் மீதும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வடபொன்பரப்பி போலீசார் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us