ADDED : ஜூன் 22, 2026 03:32 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் போலீசார் நடத்திய சோதனையில், அரிசி குடோனில் பதுக்கி வைத்திருந்த 7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலுார், ஏரிக்கரை மூலையில் உள்ள அரிசி குடோன் ஒன்றில் ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஹான்ஸ், ஆர்.எம்.டி., விமல் உள்ளிட்ட 49,870 ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டது.
குடோன் உரிமையாளர் லாலாதோப்பு தெருவை சேர்ந்த கோபால் மகன் திருவேங்கடம், 57; மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
