ADDED : டிச 20, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தென்கீரனுாரில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தென்கீரனுாரை சேர்ந்த தாண்டவராயன் மகன் மண்ணாங்கட்டி,59; என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது.
இதையடுத்து, மண்ணாங்கட்டியை கைது செய்து அவரிடமிருந்த 15 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.