நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : தியாகதுருகத்தில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தைமேடு பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் காளிதாஸ், 59; என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, காளிதாசை கைது செய்து கடையில் இருந்த 936 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.