ADDED : மார் 17, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் வாகன தணிக்கையின் போது, அரசு பஸ்சில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த முருகதாஸ், 54; குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரியவந்தது. உடன் 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, முருகதாசை கைது செய்தனர்.

