ADDED : ஜூன் 04, 2025 09:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே குட்கா பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விருகாவூர் சாலையில் உள்ள பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மூட்டையில் கடத்திசென்றது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து பைக்கில் வந்த புதுஉச்சிமேட்டை சேர்ந்த முருகேசன் மகன் கணேசன்,45; கள்ளக்குறிச்சியை சேர்ந்த பட்டாபிராமன் மகன் பாபு,52; ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 11.826 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், பாக்கு மற்றும் வி1 உள்ளிட்ட குட்கா பொருட்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.