/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஹான்ஸ் கடத்தியவர் காருடன் கைது
/
ஹான்ஸ் கடத்தியவர் காருடன் கைது
ADDED : ஆக 20, 2025 07:27 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கத்தில் இருந்து கனகனந்தல் செல்லும் சாலையில் காரில் ஹான்ஸ் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் டி.எஸ்.பி., மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பாக்கத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த டி.என்.07.பி.டி. 7473 பதிவு எண் கொண்ட டாடா இன்டிகோ காரை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 39 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 20 ஆயிரம்.
இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து, காரில் இருந்த சந்தப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் சிவச்சந்திரன், 38; என்பவரை கைது செய்து, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர்.