ADDED : மார் 21, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் ஹான்ஸ் கடத்தி சென்ற நபரை நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் கண்டறிந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., சரஸ்வதி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் ஏமப்பேர் ஜங்ஷன் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டி.என்.15. எம்.சி. 9193 பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
மலைக்கோட்டாலத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் மாயகண்ணன், 25; பைக்கில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் கடத்தி வருவது தெரியவந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாயகண்ணனை கைது செய்து,ரூ. 540 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் மற்றும் பைக்கினை பறிமுதல் செய்தனர்.
