நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே ஹான்ஸ் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி அலமேலு, 40, ஆகியோர் மீது வழக்கு பதிந்து, அலமேலுவை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.
கடையில் இருந்த ரூ.4,250 மதிப்புள்ள ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.