நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கரியலுார் அருகே விஷம் குடித்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கல்வராயன்மலை, எருக்கம்பட்டைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை, 28; திருமணம் ஆனவர்.
குடிப்பழக்கம் உள்ள இவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறு செய்த ஏழுமலை விஷம் குடித்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
கரியலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.