/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைமை ஆசிரியர்கள் மீளாய்வு கூட்டம்
/
தலைமை ஆசிரியர்கள் மீளாய்வு கூட்டம்
ADDED : நவ 09, 2024 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் 92 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடந்தது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் வட்டார வளமைய வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி தலைமை தாங்கி மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவை வளர்க்கும் விதமாக ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சக்திவேல், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 92 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.