/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்
/
சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்
ADDED : மார் 29, 2025 05:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரே, தர்ணா போராட்டம் நடந்தது.
இதில், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சரவணன், தயாநிதி, வைத்தியநாதன் தலைமை தாங்கினர். சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், கவுதம், பாலமுருகன், கோவிந்தராஜ், விக்னேஸ்வரன், தாமோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தணிக்கையாளர் சீனிவாசன் வரவேற்றார். சார்லஸ் விக்டர், மகாலிங்கம், ரவி, குமாரதேவன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட பொருளாளர் வீரபுத்தரன், சாமிதுரை, பாசில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.