/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீதிமன்றத்தில் இருதய பரிசோதனை முகாம்
/
நீதிமன்றத்தில் இருதய பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 12, 2025 11:23 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட் பணியாளர்கள் இருதய பரிசோதனை முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கம், ராஜூ இருதயம்-தோல் மருத்துவமனை சார்பில் இருதய பரிசோதனை முகாம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
வழங்கறிஞர் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் இளையராஜா முன்னிலை வகித்தனர்.
இணை செயலாளர் இளையராஜா வரவேற்றார். ராஜூ இருதயம்-தோல் மருத்துவமனை முதன்மை இருதய நிபுணர் பாபு சக்கரவர்த்தி, தோல் நிபுணர் இந்துபாலா தலைமையில் 40க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினர் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள், கோர்ட் பணியாளர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டர்களுக்கு இருதய நோய் பரிசோதனை செய்தனர்.
இதில் அனைவருக்கும் இ.சி.ஜி., எக்கோ கார்டியோகிராம், சி.பி.சி., உடல் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பி.எல்.எஸ்., எனும் உயிர் காக்கும் முதலுதவி செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் ராஜ்மோகன், செந்தில்நாதன், பழனிசாமி, மோகன்ராஜ், ஜெயராம் ஆகியோர் முகாம் பணிகளை மேற்கொண்டனர். நுாலகர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமில், மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி உட்பட வழக்கறிஞர்கள், கோர்ட் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.