ADDED : மார் 04, 2026 03:30 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெப்ப சலன பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் தலைமையில் கூட்டம் நடந்தது.
சுகாதார துறை சார்பில் நடந்த கூட்டத்தில், வெப்ப சலன முன்னெச்சரிக்கை, தொற்று நோய் தடுப்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி உள்ளிட்ட பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் பிரசாந்த், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெப்ப சலனத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். 14 வயது பெண் குழந்தைகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி பணிகள் குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் சித்திரசேனா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
