/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனரக லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
/
கனரக லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
ADDED : அக் 08, 2025 12:01 AM

கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு குடோனில் உள்ளூர் கனரக வாகனங்களுக்கு அரிசி, கோதுமை லோடு ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி சின்னசேலம் கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு குடோனில் கடந்த 18 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், அரிசி, கோதுமை லோடுகளை ஏற்றும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்ற புதிய சட்டத்தின்படி அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதனால் இனி வரும் காலங்களில் அதிக பாரம் ஏற்ற மாட்டோம், வாடகை உயர்வு வேண்டும் என ஒப்பந்ததாரிடம் தெரிவித்தோம்.
ஒரு டன் லோடுக்கு ரூ. 600 வாடகை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் ஒரு டன்னுக்கு ரூ. 170 மட்டுமே வழங்குகின்றனர். அதிக பாரம் ஏற்ற கூடாது என கூறியதால், கடந்த ஜூலை முதல் உள்ளூர் கனரக லாரிகளுக்கு லோடு தராமல் வெளியூர் லாரிகளை வரவழைத்து லோடு தரப்படுகிறது. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுகின்றனர்.
எனவே உள்ளூர் கனரக லாரிகள் சேமிப்பு கிடங்கு குடோனில் லோடு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.