/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
/
சின்னசேலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 22, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.
சின்னசேலம் பஸ் நிலையத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.
பேரணியை எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
டி.எஸ்.பி., தேவராஜ் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உட்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பைக் பேரணியில் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். பேரணி பஸ் நிலையத்தில் துவங்கி பி.டி.ஓ., அலுவலகம் வரை பேரணி நடந்தது.

