/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஹீமோகுளோபினோபதி திட்டம் : கலெக்டர் ஆலோசனை
/
ஹீமோகுளோபினோபதி திட்டம் : கலெக்டர் ஆலோசனை
ADDED : ஏப் 25, 2025 05:26 AM

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை வட்டாரத்தில் ஹீமோகுளோபினோபதி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கல்வராயன்மலை வாழ் மக்களுக்கு, ஹீமோகுளோபினோபதி திட்டத்தின் கீழ் ரத்த சிவப்பணு புரதத்தின் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
இதில் கல்வராயன்மலை வட்டாரத்தில் வசிக்கும், 40 வயது வரை உள்ள பழங்குடியின மக்களுக்கு ரத்த சிவப்பணு புரதத்தின் குறைபாடுகளைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கான முன்னேற்பாடு மற்றும் செயல்முறை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்து பழங்குடியினர் மக்களிடையே, கிராமங்கள் தோறும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுகாதாரம், கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், பழங்குடியினர் நலம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமிற்கு பொதுமக்களை அழைத்து வர அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

