/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரும்பாக்கம் புறவழிச்சாலையில் விபத்தை தவிர்க்க உயர்மட்ட பாலம் வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : ஆக 28, 2025 02:24 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் புறவழிச்சாலையில் அடிக்கடி உயிர் பலியை ஏற்படுத்தும் அய்யனார் கோவில் மும்முனை சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் புறவழிச்சாலையில் அரும்பாக்கம், அய்யனார் கோவில் அருகே மும்முனை சந்திப்பு உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது. அவ்வப்போது ஏற்படும் வாகன விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மிகவும் சிக்கலான இந்த மும்மனை சந்திப்பில் ஆசனுார் மார்க்கத்தில் இருந்து திருக்கோவிலுார் நகருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எப்படி செல்வது என்று குழம்பி போய் திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
சிக்கலான இந்த சந்திப்பில் திருவண்ணாமலை - ஆசனுார் சாலை மார்க்கத்தில் உயர்மட்ட பாலம் அமைத்து, சர்வீஸ் சாலை ஏற்படுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும். இதனால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தை கவனத்தில் கொண்டு இச்சாலையை நெடுஞ்சாலைத்துறை நான்கு வழிச்சாலையாக மா ற்றி வரும் நிலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.