ADDED : நவ 29, 2025 07:09 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: மணம்பூண்டியில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க கிளை துவக்க விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில், ரகோத்துமர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என்ற பெயரில் கிளை துவக்க விழா நடந்தது.
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை தாங்கினார். கிளை தலைவர் சுரேஷ், செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் மணலி மனோகர் சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட செயலாளர் தனபால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
