/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
/
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
ADDED : டிச 08, 2025 05:51 AM

கள்ளக்குறிச்சி: திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ஹிந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்துானில் கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து, நீதிமன்றம் தீர்ப்பினை மதிக்காமல் ஹிந்து மக்கள் மனது புண்படும்படி செயல்பட்ட தி.மு.க., அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஹிந்து முன்னணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டனர்.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஹிந்து முன்னணியினர் நேற்று மாலை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் அருண், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம், விஷ்வ ஹிந்து பரிஷத் சமுதாய நல்லிணக்க மாநில அமைப்பாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளிட்ட 56 பேர்களை, கள்ளக்குறிச்சி போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக கூறி கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

