/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் இடத்தை மீட்க இந்து மகா சபா கோரிக்கை
/
கோவில் இடத்தை மீட்க இந்து மகா சபா கோரிக்கை
ADDED : ஜன 02, 2025 06:28 AM

உளுந்துார்பேட்டை; கோவிலுக்கு சொந்தமான இடங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்கவேண்டும் என அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பெரி செந்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இறைச்சி கூடம் பயன்பாடின்றி உள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான கட்டடங்கள் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இவற்றை இடிக்க திறந்தவெளி டெண்டர் விடவேண்டும். 1973 முதல் வாடகை தராமல் உள்ள இடங்கள் உட்பட கோவில் இடங்களை மீட்கவேண்டும்.
பஸ் நிலையத்தில் இருந்து சென்னை சாலையில் உள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

