/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிப்பு: உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
/
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிப்பு: உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிப்பு: உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிப்பு: உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 05, 2024 06:58 AM

கள்ளக்குறிச்சி; வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகாதேவன், பா.ஜ., மாவட்ட தலைவர் அருள், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் பாலாஜி, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், வங்கதேசத்தில் யூனுாஸ் தலைமையிலான அரசு ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தி வரும் மனித நேயமற்ற வன்முறையை கண்டித்தும், இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உலக அரங்கில் வங்கதேசத்தை தனிமைப்படுத்த வேண்டும். வங்க தேசத்துக்கு ஐ.நா., படையை அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன், கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தனசேகர், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாத்ரு சக்தி நிர்வாகிகள் தேவி, புஷ்பா, துர்கா வாஹினி , நிர்வாகிகள் அமுதா, மங்கலம், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், அசோக்குமார், மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட செயலாளர்கள் ஹரி, சதீஷ்குமார், ராஜேஷ், கண்ணன், பக்கிரிசாமி, செந்தில்குமார், ரவி, ஜெயவர்மா, ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் தியாகராஜன், நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமராஜன், அன்பழகன், தீர்த்தமலை, தொழிலதிபர்கள் பாலமுருகன், சதீஷ், ஸ்ரீதர், சிவக்குமார், கஸ்துாரி இளையாழ்வார், தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழுவினர் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.