/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு
/
மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு
மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு
மக்களை அச்சுறுத்தும் குதிரைகள் விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஆக 11, 2025 06:48 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சந்தப்பேட்டை பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் குதிரைகளால், பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலுார் நகராட்சி புறநகர் பகுதியான சந்தப்பேட்டையில், சமீப காலமாக குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட குதிரைகள் சந்தப்பேட்டை நகர வீதிகளில் வலம் வருகிறது. பகல் நேரத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குதிரைகள், சாலையில் செல்வோரை அச்சுறுத்துகிறது. சில நேரம் சாலையோர கடைகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இரவு நேரத்தில் அரும்பாக்கம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.
திருக்கோவிலுார் நகர பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக வலம் வரும் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகள், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குதிரைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம், வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.