/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவமனை, புதிய பஸ்கள்: எம்.எல்.ஏ., கோரிக்கை
/
மருத்துவமனை, புதிய பஸ்கள்: எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 22, 2025 04:07 AM

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும் என சட்டசபையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வலியுறுத் தினார்.
இது குறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் வாணாபுரம், தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் அருகில் உள்ள திருக்கோவிலுார், சங்கராபுரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, வாணாபுரத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும். மேலும், எல்.என்.பட்டி, ரிஷிவந்தியம், மேலந்தல் மற்றும் மணலுார்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் வாணாபுரம் வழியாக கள்ளக்குறிச்சி செல்வதற்கு புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதற்கு பதிலளித்த துறை சார்ந்த அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.