/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு: 2 பேர் கைது
/
முன்விரோத தகராறு: 2 பேர் கைது
ADDED : ஜன 19, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி- சின்னசேலம் அருகே முன்விரோத தகராறு காரணமாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 40; அதே ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் தினேஷ்குமார், 22; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 17ம் தேதி காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தினேஷ்குமார், கவியரசன், 24; சின்னசாமி, சங்கர், அவரது மனைவி செல்வநாயகி ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, தினேஷ்குமார், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர்.