/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விடுதி பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
விடுதி பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : நவ 03, 2024 06:56 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, சங்க மாவட்ட செயலாளர் வேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கஜேந்திரன் வரவேற்றார். மாவட்டம் முழுதும் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு சமையலராக பணிபுரிபவர்களுக்கு காவலராகவும், காவலராக பணிபுரிபவர்களுக்கு அலுவலக உதவியாளராகவும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துாய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியமாக 15 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு விடுதிக்கு 2 சமையலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு துாய்மைப் பணியாளர் மற்றும் காவலரை நியமித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.