/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரசோழபுரம் குளோபல் சிட்டியில் ரூ.15 லட்சத்துக்கு வீட்டு மனை விற்பனை
/
வீரசோழபுரம் குளோபல் சிட்டியில் ரூ.15 லட்சத்துக்கு வீட்டு மனை விற்பனை
வீரசோழபுரம் குளோபல் சிட்டியில் ரூ.15 லட்சத்துக்கு வீட்டு மனை விற்பனை
வீரசோழபுரம் குளோபல் சிட்டியில் ரூ.15 லட்சத்துக்கு வீட்டு மனை விற்பனை
ADDED : டிச 25, 2024 07:48 AM

கள்ளக்குறிச்சி : வீரசோழபுரத்தில் ஜனனி ேஹாம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குளோபல் சிட்டியில் ரூ.15 லட்சத்துக்கு வீட்டுமனை விற்பனை செய்யப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
இது குறித்து ஜே.எஸ்., நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் கூறியதாவது: சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் பஸ்நிறுத்தம் அருகே குளோபல் சிட்டி வீட்டு மனை பிரிவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நகர ஊரமைப்பு இயக்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி பெற்று மனை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து தெருக்களிலும் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி, தெரு மின்விளக்கு, அனைத்து மனைகளுக்கும் தண்ணீர் பைப் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில், மனைப்பிரிவுக்குள் நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
குறிப்பாக, புதிய கலெக்டர் அலுவலகம் அருகே மனைப்பிரிவு உள்ளது. மனைப்பிரிவில், 600 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், 30 சதவீத தொகையான ரூ.4.5 லட்சத்தை செலுத்தி மனை வாங்கி கொள்ளலாம். மீத தொகைக்கு வங்கி கடன் பெற்றுத்தரப்படும்.
மனை உரிமையாளர் விரும்பினால், கார் பார்க்கிங் வசதியுடன் வீடு கட்டியும் தரப்படும். மேலும் விபரங்களை 91766 66555 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்.

