/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு புகுந்து நகை பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
/
வீடு புகுந்து நகை பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
வீடு புகுந்து நகை பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
வீடு புகுந்து நகை பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
ADDED : டிச 03, 2025 06:24 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டு உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 67; ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர். இவர் கடந்த 30 ம் தேதி சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.