/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு
ADDED : ஏப் 11, 2025 06:23 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணமூர்த்தி, 38; தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கஸ்துாரி, 32; இவர் கடந்த, 7ம் தேதி காலை வீட்டை பூட்டி, மீட்டர் பாக்ஸில் சாவியை வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது,  கதவு திறக்கப்பட்டு, பீரோவை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

