/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : டிச 28, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கரடிசித்தூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார், சூசை நகரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் லுார்துசாமி மனைவி கிரில்சயோனா, 42; இவர், கடந்த 24ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு கரடிசித்துாரில் உள்ள சர்ச்சில் நடந்த திருப்பலியில் பங்கேற்க சென்றார்.
இரவு 11:00 மணியளவில் வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

