/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் வீடுகள் கணக்கெடுப்பு
/
கள்ளக்குறிச்சியில் வீடுகள் கணக்கெடுப்பு
ADDED : டிச 24, 2025 05:42 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்காக 21 வார்டு வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் நகராட்சியின் 21 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் கொசுப்புழு பணியாளர்கள் 30 பேர் கடந்த ஒரு வாரம் முன் துவக்கினர்.
இவர்கள் நகராட்சி பகுதிகளிலும் வீடு வீடாக சென்று வீடுகளின் எண்ணிக்கை, குடும்ப நபர்கள் விபரங்கள் குறித்து கணக்கெடுக்கின்றனர். அனைத்து வீடுகளிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கான 52 வார காலண்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

